
posted 6th January 2023
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள மூன்று கல்வி அதிகாரிகளுக்கு, வலயக்கல்வி அலுவலகத்தில் பிரிவுபசார வைபவம் ஒன்று நடத்தப்பட்டது.
அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி. கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆங்கில பாடம்) பி.எம். அபுல் ஹஸன், உதவிக் கல்விப் பணிப்பாளர் (கணிதம்) ஏ.எல்.ஏ.எம். யூசுப் ஆகிய மூன்று ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளுக்குமே மேற்படி பிரிவுபசார வைபவம் நடத்தப்பட்டது.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்- ஷெய்க் ஏ.எம். றஹ்மத் துல்லாஹ் தலைமையில், வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வைபவம் இடம்பெற்றது.
இதன் போது ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள் மூவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா, நினைவுப்பரிசு மற்றம் பொற்கிழிவழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
வைபவத்திற்குத் தலைமை வகித்த வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்- ஷெய்க் றஹ்மத்துல்லா, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள் மூவரதும் சிறந்த கல்விப் பணிகளை வெகுவாகப் பாராட்டினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)