பட்டிப் பொங்கல்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக் கிழமை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கொண்டாடினார்கள். பொங்கலுக்கு அடுத்த நாளான நேற்று (16) திங்கட்கிழமை உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும், காளைகளுக்கும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

வட்டுக்கோட்டை – அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

சிதம்பரமோகனால் இந்தியாவின் காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித காசி தீர்த்தமானது யாழ். இந்திய துணைத் தூதுவரால் குளத்தில் கலக்கப்பட்டது. பின்னர் பட்டிப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

துயர் பகிர்வோம்

இந் நிகழ்வில் சிதம்பரமோகன், யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், நாகவிகாரை விகாராதிபதி, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பட்டிப் பொங்கல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)