
posted 1st January 2023
சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இருந்து தேவாலயம் ஒன்றுக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நேற்று சனிக்கிழமை (31) நள்ளிரவு வேளை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த வட்டுக்கோட்டை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால், அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவியது.
வட்டுக்கோட்டை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)