நோய் தாக்கும் அபாயம். எச்சரிக்கும் விவசாய பணிப்பாளர்

கிளிக் செய்து பாருங்கள்

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கைகளுக்கு நோய் அபாயம் தோன்றியுள்ளதால் விவசாயிகள் இவற்றை கண்டுணர்ந்தால் உடனடியாக அயலிலுள்ள விவசாய போதனாசிரியர்களை நாடவும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளரான திருமதி சக்கிலா பானு இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளரான திருமதி சக்கிலா பானு மேலும் தெரிவிக்கையில்;

தற்பொழுது அண்மைக் காலமாக நாட்டில் வயல்களில் மஞ்சள் நிறமாதல் நோய் காணப்பட்டு வருகின்றது.

பணிபூச்சித்தாக்கம் அல்லது கபிலநிறபுள்ளி நோய் அல்லது வேர் முடிச்சு வட்ட நோய் ஆகியனவையின் தாக்கமே என அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்த வேர்முடிச்சு வட்டப்புழு என்பது இவ்வளவு காலமும் மரக்கறி மற்றும் மேட்டுப் பயிர் செய்கையிலேயே தாக்கத்தை உருவாக்கி வந்துள்ளது.

ஆனால் இந் நோய் தற்பொழுது நெற்பயிர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இத் தாக்கம் எற்பட்டுள்ளது என விவசாயிகள் அடையாளம் காணுவது எவ்வாறு என தெரிவிக்கும்போது புதிதாக உருவாகும் இலைகள் சிதைந்து விழிம்புகள் சுறுண்டு வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

அத்துடன் இத் தாக்க்த்தினால் வயல் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்கள் நாற்றுக்கள் எல்லாம் கதிர்வரும் பருவத்துக்கு முன்னரே இவைகள் முதிர்ச்சி அடைந்துவிடும். கபில நிறமாக வயல் மாறிவிடும்.

கபில நிறப்புள்ளி நோய் ஏற்பட்டாலும் இங்கு வட்டப்புழு தாக்கமும் இருப்பதாகக் கருதலாம். இந் நோயைக் கண்டுபிடிப்பதற்கு தாக்கம் எற்பட்ட இப் பயிரை பிடுங்கி பார்க்கும் போது இதனி வேரில் கொக்கி பெட் விதமான அமைப்பில் பழுப்பு நிறமான உருண்ட வித திரச்சிகள் அல்லது சிறிய முடிச்சுக்கள் காணப்படும்.

வட்டப்புழு என்ற நோய் நீர்பாசம் செய்யப்பட்ட அல்லது வெள்ளப்படுத்திய நீரிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.

ஆகவே வயல்களுக்கு தனித்தனி வயலாக நீர்ப் பாய்ச்சல் செய்யப்பட வேண்டும். வழ்மையாக நீர்ப்பாய்ச்சல் செய்வது போல ஒரு வயலிலிருந்து அடுத்த வயலுக்கு நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாவிக்கப்படும் விவசாய உபகரணங்கள் ஒவ்வொரு வயலுக்கும் பாவிக்கும் போதும் நன்கு கிருமி அகற்றிப் பாவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளும், வயலில் வேலை செய்பவர்களும் ஒரு வயல் விட்டு மற்ற வயலுக்கு போகு முன்பு கிருமி அகற்றி கொண்டு கை, கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

அத்துடன் சிபாரிசு செய்யப்பட்ட பசளைகளைப் பாவிக்கப்பட வேண்டும். அறிவுத்தலின்படி அததற்குரிய அளவுப் பிரமாணங்களின்படி பசளைகள் பாவிக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் உங்கள் பகுதி விவசாயத்தில் இவ்வாறான தாக்கங்கள் எற்பட்டால் உடனடியாக அயலிலுள்ள விவசாய போதனாசிரியர்களை நாடவும். அல்லது என்னுடன் தொடர்பு கொள்ளும்படி திருமதி சக்கிலா பானு தெரிவித்தார்.

நோய் தாக்கும் அபாயம். எச்சரிக்கும் விவசாய பணிப்பாளர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)