தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்ட தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இது குறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் வட்டாரக் கிளைகள் புணரமைப்பு செய்யப்படிருந்த போதிலும் பிரதேசக் கிளைகள், தொகுதிக் கிளைகள் புணரமைப்பு செய்யப்படவில்லை. அதனால் மாவட்டக் கிளையும் அமைக்கப்படவில்லை.

துயர் பகிர்வோம்

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் வகையில் வட்டாரக் கிளைகள் விரைவாக கூடி வேட்பாளரை தெரிவு செய்வதுடன் வேட்பாளர் தெரிவின் போது பட்டியல் வேட்பாளர் தெரிவு சம்மந்தமாகவும் கவனம் செலுத்தவும், அத்தோடு வேட்பாளர் தெரிவின் போது இளைஞர், மகளிர் உள்வாங்கும் வகையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை வட்டாரக் கிளைத் தலைவர், செயலாளர், பொருளாலர் சிபாரிசு செய்து தேர்தல் நடவடிக்கை குழுவிற்கு கையளிக்க தயாராகுமாறு கேட்டுக் கொள்வதுடன் மாவட்ட தேர்தல் நடவடிக்கை குழு கூடி கலந்துரையாடிய பின்னர் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என்பதனையும் அறியத்தருகிறேன்.

மாவட்ட தேர்தல் நடவடிக்கை குழு, கி. துரைராசசிங்கம் (மு.பா.உ), பா. அரியநேந்திரன் (மு.பா.உ), சீ. யோகேஷ்வரன் (மு.பா.உ), ஞா. ஸ்ரீநேசன் (மு.பா.உ), இரா. சாணக்கியன் (பா.உ), மா. நடராஜா (மு.மா.ச.உ), தி. சரவணபவன் (முதல்வர்), கி. சேயோன் (தலைவர் வா.மு), க. றஞ்சினி (உப தவிசாளர்), க. குருநாதன் (மு.கா.ஆ), லோ. தீபாகரன் (தலைவர் வா.மு (மட்), க. சசீந்திரன் (செயலாளர் வா.மு), ம. நிலக்சன் (பொருளாலர் வா.மு) ஆகியோரே இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)