
posted 1st January 2023

பருத்தித்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத - உள்ளூராட்சி மாத நிகழ்வுகளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் அ.சா. அரியகுமார் தலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க. சத்தியபாலன், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் அ. வினோராஜ் ஆகியோர் மாநாட்டு மண்டபத்திற்கு கலாச்சார பூர்வமாக அழைத்துவரப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவிக்கு பிரதம விருந்தினர் பரிசில் வழங்கியதைத் தொடர்ந்து, மாணவிகளின் நடன நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது.
இவ் விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது இந் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தமை பெருமைக்குரியதாகும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)