துறைத் தலைவராக நியமனம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப பீட கணினி அறிவியல் துறையின் தலைவராக கலாநிதி. அஹமட் றிபாய் காரியப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

கல்முனை சாஹிறா தேசியக் கல்லூரி, சாய்ந்தமருது அல் - கமறூன் வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவரான கலாநிதி. அஹமட் றிபாய் காரியப்பர், சாய்ந்தமருது திடீர் மரண விசாரணை அதிகாரி மர்ஹூம் றாஸிக் காரியப்பர் தம்பதியரின் புதல்வராவார்.

அவரது இந்த பதவி நியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

துயர் பகிர்வோம்

துறைத் தலைவராக நியமனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)