
posted 7th January 2023
காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய திருப்பள்ளியெழுச்சி 10ம் நாளாகிய 06.01.2023ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதி வழியாக காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளின் பின்னர் மீண்டும் தேரோடும் வீதிவழியாக காரைதீவின் அனைத்து ஆலயங்களுக்கும் சென்று சமுத்திரத்தை அடைந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் திருவாதிரை தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

The Best Online Tutoring

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)