
posted 8th January 2023
இலங்கை முதலுதவி சங்கம் இந்து சமய தொண்டர் சபை இணைந்து ஏற்பாடு செய்த திருவாசக முற்போதல் நேற்று சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 5:00 மணி வரை நாற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் இடம் பெற்றுள்ளது.
இலங்கை முதலுதவி சங்க ஆணையாளர் வை. மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற இத் திருவாசக முற்போதலில் இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள், கண்காணிப்பாளர்கள், இந்து சமய தொண்டர்கள், மற்றும் ஓதுவார்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருவாசக ஓதலில் ஈடுபட்டனர்.
மேலும் இலங்கை முதலுதவி சங்கம், இந்து சமய தொண்டர் சபையில் இணைந்து சமய சமூக பணிகளில் ஈடுபட்டவர்களை கவிஞரும் அர்ச்சகருமான சிவசிறி குமார சுவாமி நாதக் குருக்கள், சான்றிதழ்களை வழங்கி கௌரவிதததுடன் ஆண்மீக உரையினை நிகழ்த்தினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)