
posted 1st January 2023

2023 ஆம் ஆண்டு புதுவருடத் தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் அதிகமான பங்குகளில் நடுச்சாம திருப்பலிகளும், இதைத்தொடர்ந்து காலையிலும் திருப்பலிகள் இடம்பெற்றன.
தலைமன்னார் பங்கில் புனித லவுறேஞ்சியார் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட சமூக தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்கனரும் , மன்னார் கத்தோலிக்க அச்சகம் பதிப்பாசிரியருமான அருட்பணி எம்.செல்வநாதன் அடிகளார் வருடப்பிறப்பு திருப்பலியை ஒப்புக்கொடுப்பதையும் இத்த் திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)