
posted 9th January 2023
உள்ளூராட்சி தேர்தலை யாழ் மாநகரசபை முன்னாள் மேயர் மணிவண்ணன் அணியினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து எதிர்கொள்வர் என்று கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் திங்கள் (09) அன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சில், மணிவண்ணன் அணியினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்துப் பேசப்பட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதேநேரத்தில், மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கே தாம் விரும்புவதாக மணிவண்ணன் கூறியுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
