தமிழ் அரசியல்வாதிகள்  ஒருகுடையின்கீழ் செயல்பட வேண்டும்

ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலப்போக்கை கைவிட்டு தெரிவு செய்யப்பட்ட மக்களை ஏமாற்ற நினைக்காது ஜனாதிபதியின் பேச்சு வார்த்தையில் ஒரு குடையின் கீழ் இருந்து ஒரே கருத்துடன் செயல்பட வேண்டும் என கடந்த 5ந் திகதி ஆரம்பமாகி 10ந் திகதி செவ்வாய்கிழமை ஆறு நாட்கள் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதிநாளின் போதே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பாக ஸ்பீன்னா என்ற பெண்மணி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான ஒரு அதிகாரப்பகிர்வு கிடைக்க வேண்டும் என்று ஆறு தினங்களின் இறுதி நாளில் இன்று (செவ்வாய்கிழமை 10) நிற்கின்றோம்.

துயர் பகிர்வோம்

எங்கள் மௌன வழி போராட்டத்தில் நாங்கள் கேட்டு நிற்பது எமது தமிழ் மக்கள் சிறுபான்மையாக காணப்படுகின்றனர்.

எங்களுக்கு சமஷ்டி அதிகார பகிர்வு கிடைக்கப்பெற வேண்டும். இன்று (10) ஜனாதிபதியுடன் தமிழ் மக்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க இருக்கின்றது.

ஆகவே தமிழ் அரசியல் கட்சிகள் யாவரும் ஒருங்கிணைந்து ஒரே கொள்கையுடன் இப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். மேலும், பேசி காலத்தை கடத்திச் செல்வதை ஏற்கமாட்டோம்.

நாங்கள் கூடிநிற்கும் இம் முயற்சி வெயில் மழை பனி என பார்க்காது யாவரும் ஒன்றுகூடி இப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என ஸ்பீன்னா தெரிவித்தார்.

தமிழ் அரசியல்வாதிகள்  ஒருகுடையின்கீழ் செயல்பட வேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)