
posted 7th January 2023
மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வாக வீதியோட்ட நிகழ்வு 07.01.2023 சனிக்கிழமை காலை ஆறுமணியளவில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் விஜயதாஸன் கு.ளு.ஊ. அவர்களின் தலைமையில் வங்காலை கத்தாளம் பிட்டி அருகில் அரம்பமாகியது.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி இருந்தார்கள்.
இன்றைய நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், நானாட்டான் மஹாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப் படுத்தினார்கள்.
மேலும் கொரோனா உட்பட நாட்டில் ஏற்பட்ட இடர்கள் காரணமாக தடைபட்டிருந்த வீதியோட்ட நிகழ்வானது இரண்டு வருடங்களின் பின்னர் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)