டக்ளசின் கூற்றில் சந்தேகம் முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன்

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும், அதனை மூன்று படிமுறைகளில் செய்யலாமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்களுக்கு சந்தேசகத்தைத் தோற்றுவித்துள்ளது” இவ்வாறு முன்னாள் திகாமடுள்ள மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப பாராளுமனற் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வந்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதி நாள் பூர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.

துயர் பகிர்வோம்

ஐக்கிய இலங்கைக்குகள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டுமெனும் பிரதான கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வந்தது.

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வின் போது மேற்படி ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளுடாக பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

இந்தப் பேரணியை பொலிஸார் அனுமதி பெறவில்லையெனக் கூறிதடுக்க முற்பட்டபோதும் இது ஆலயத்தைச் சுற்றிய உள்ளுர் வீதியெனக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டோர் பேரணியைத் தொடர்ந்தனர்.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“அரசியலமைபட்பின் 13 ஆவது திருத்தச் சட்டதை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை உடனடியாகச் செய்ய வேண்டுமெனக் கூறாது மூன்று படிமுறைகளில் (கட்டங்களில்) செய்யலாமென கூறியிருப்பது தமிழ் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கின்றது.

பேரினவாத அரசாங்கம் தீர்வு வழங்கலை காலம் கடத்தும் நோக்குடன் அவ்வாறு கருத்து வெளியிடுமாறு அமைச்சரைத் தூண்டியிருக்கலாமென்ற சந்தேகமே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பிரித்தானியர் ஆட்சியில் தமிழர்களுக்கென்று தனி இராச்சியமே இருந்தது.

ஆனால் கிடைத்த சுதந்திரமோ தமிழர்களைப் புறந்தள்ளி பெரும்பான்iமை சமூகத்தவருக்கு மட்டுமானதாகவே அமைந்துள்ளது.

The Best Online Tutoring

எனவேதான் 74 வருடங்கள் கடந்த எமது உரிமைப் போராட்ட வரலாற்றில் தமிழ்த் தலைமைகள் பல ஒப்பந்தங்கள் செய்தும் இன்னும் விடிவு கிடைக்கவில்லை.

எனினும் தமிழ் மக்களுக்கான சமஷ்டித் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான காலம் இன்று கனிந்துள்ளது.

எனவே ஒன்றுபட்ட குரலாக நாம் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச நாடுகளினதும், நம்புலம் பெயர் அமைப்புக்களின் அழுத்தம் காரணமாகவும் இன்று

ஏற்பட்டுள்ள சாதக நிலமையை நம்மவர்கள் பிரிந்து நிற்பதால் நலிவடையச் செய்து விடக்கூடாது” என்றார்.

கல்முனை திரு இருதய ஆலய அருட்தந்தை ஏ.தேவதாஸன், பெரிய நீலாவணை மகாவிஷ்ணு ஆலய சிவஸ்ரீ பத்ம நிலோஜன் குருக்கள் உட்பட மகளிர் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் உரையாற்றினார்.

டக்ளசின் கூற்றில் சந்தேகம் முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)