ஜே.வி.பி தலைவர் வருகிறார்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் (ஜே.வி.பி) நாடாளுமனற் உறுப்பினருமான அனுரகுமார திசா நாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக வைத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி அவர் வருகை தரவுள்ளதுடன், “ஒன்றிணைவோம், வெல்வோம் தீர்வு திசைகாட்டி” எனும் தலைப்புடன் மாவட்டத்தின் சில பிரச்சாப் பொதுக் கூட்டங்களில் தலைவர் அனுர குமார திசா நாயக்க உரையாற்றவுமுள்ளார்.

திசை காட்டி சின்னத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் நிந்தவூர் பிரதேச

சபைக்கான வேட்பாளர்கள் அறிமுக மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி பிற்பகல் அவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் எம். சம்சுன் அலி தலைமையில் நிந்தவூர் பிரதான வீதி, அமீர் மஹால் அரங்கில் கூட்டம் நடைபெறும்.

இதேவேளை கல்முனை மற்றும் சில பிரதேசங்களில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டங்களிலும் தலைவர் அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றுவாரெனவும் தெரியவருகின்றது.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களை அல்லலுற வைத்து இன்னும் ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்திருப்போரை அகற்றி புதிய யுகம் ஒன்றுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் அழைப்பை அவர் பிரதானமாக வலியுறுத்துவாரென எதிர் பார்க்கப்படுகின்றது.

ஜே.வி.பி தலைவர் வருகிறார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)