
posted 25th January 2023
சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் விபத்தை ஏற்படுத்தி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த நால்வர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டா ரக வாகனத்தைக் கொண்டு, கார் ஒன்றை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடத்தில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)