குட்டித்தேர்தல் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இரண்டாம் கட்டமாக மேலும் சில முஸ்லிம் பிரதேசங்களுக்கும் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

குறிப்பாக சம்மாந்துறை, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, ஒலுவில், நிந்தவூர், மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களுக்கு அவரது வருகை அமைந்திருந்தது.

தலைவர் ஹக்கீம் இதன்போது அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

துயர் பகிர்வோம்

நடைபெறவிருக்கும் குட்டித் தேர்தலான உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பிலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களின் ஆட்சியைக் கைப்பற்றும் வகையிலான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான தெரிவுகள் தொடர்பிலும் மேற்படி கலந்துரையாடல்களின் போது ஆராயப்பட்டது.

மேலும் இந்தக் கலந்துரையாடல்களின் போது முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்த்தர்களான நாடாளுமனற் உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், எம். பைஸால் காசீம் மற்றும் கட்சியின் தவிசாளர் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத், மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சீ. சமால்தீன் ஆகியோரும், தலைவர் ஹக்கீமுடன் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் முன்னாள்அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், அம்பாறை மாவட்டத்தில் உள்ளராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான முஸ்தீபு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இத்தேர்தலில் மேற்படி இரு பெரிய முஸ்லிம் கட்சிகளும் இந்த மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றும் வியூகங்களை வகுத்து வருவதுடன், முட்டி மோதும் நிலமையும் ஏற்படலாமெனக் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

அதேவேளை இந்த இரு கட்சிகளிலும் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் பல சபைகளுக்கும் சுயேச்சை அணிகளை நிறுத்துவதற்கான முயற்சிகளும் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

குட்டித்தேர்தல் குறித்து ஆராய்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)