
posted 27th January 2023
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அடுத்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 31 ம் திகதி வருகைதரவிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில பிரதேதேசங்களில் நடைபெறவிருக்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்படி 31ஆம் திகதி ஓட்டமாவடி, சம்மாந்துறை, அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவிருக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
ராஜபக்ஷக்கள் மீதும், அவர்களது ஆசிர்வாதத்துடன் நடைபெறும் இன்றைய ரணில் தலைமையிலான ஆட்சி மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வு காரணமாக சஜித்தின் பிரச்சார கூட்டங்களில் பெருமளவிலான மக்கள் திரண்டு வந்து கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)