
posted 11th January 2023
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் 6ஆம் நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு ஏ - 9 வீதி ஊடாக டிப்போ சந்தியில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்ததுடன், அமைதியாக போராடினர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)