
posted 9th January 2023
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 4ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்ததுடன், அமைதியாக போராடினர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)