
posted 6th January 2023
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட மன்னார் மக்களின் கவனயீர்ப்பு போராட்டமானது இரண்டாவது நாட்களாக வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.
ஜனாதிபதி தமிழர் தரப்புடன் பேசுவதற்கான எற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓரிரு தமிழ் தரப்பு கட்சிகளுடன் பேசுவதை விடுத்து அனைத்து தமிழ்தரப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் எனவும்,
இது விடயமாக வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள அதிகமான தமிழ் மக்கள் தங்கள் கருத்துக்களாக தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என வெளிப்படுத்தி வருவதால் இவற்றுக்கு தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி 05.01.2023 தொடக்கம் 10.01.2023 வரை இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)