கவனயீர்ப்பு போராட்டத்தின்  4ம் நாள்
கவனயீர்ப்பு போராட்டத்தின்  4ம் நாள்

ஜனாதிபதி தமிழ் தரப்புடன் பேசுவதற்கான நிலை ஒன்று உருவாகி வருகின்றமையால் தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த 5ந் திகதி தொடக்கம் 10ந் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மன்னாரில் மன்னார் நகருக்குள் காலை தொடக்கம் மாலை வரை இக் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருவதில் ஞாயிற்றுக் கிழமை 4ம் நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

துயர் பகிர்வோம்

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகமான பெண்கள் ஈடுபட்டு வருவதுடன் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொள்ளுகின்றனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் (போரம்) மற்றும் 'மெசிடோ' நிறுவனங்களின் ஏற்பாட்டில் இத் திட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

கவனயீர்ப்பு போராட்டத்தின்  4ம் நாள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)