
posted 29th January 2023
நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தால் கற்கோவளம் பாடசாலையில் 2020, 2021, 2022 ஆகிய வருடங்களில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 5 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வு காலை 10:00 மணியளவில் நெல்லியடி வட்ட லயன்ஸ் கழக தலைவர் எஸ் ஜெயரூபன் தலமையில் இடம் பெற்றது.
மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமான் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழக பிராந்திய தலைவர் ஐங்கரன், வலய தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம், நெல்லியடி வட்ட
செயலாளர் சிறிபவன், பாடசாலை அதிபர், ஆகியோர் 2020, 2021,2022 ஆகிய ஆண்டுகளில் தரம் ஐந்து புலமை பரீட்சையில் சித்தி எய்திய ஐந்து மாணவர்களைக் கல்விக்கான ஊக்கிவிப்பு நிதி வழங்கி கௌரவித்தனர்த்தனர்.
இதில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)