
posted 9th January 2023
நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டிவருகின்றன.
இதன்படி கல்முனை மாநகர சபை தேர்தலுக்காக மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் கட்சி இன்று (09) அம்பாறை கச்சேரியில் கட்டுப்பணம் செலுத்தியது.
இதன் போது கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், செயலாளர் முஜாஹித், தவிசாளர் முஹம்மத் ரஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)