
posted 10th January 2023
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்;
தமிழ் மக்களுடைய கடந்தகால போராட்டம், இழப்புக்கள், தியாகங்கள், அனைத்தையும் தமிழரசுக் கட்சி செய்த இந்த செயல் மூலமாக கொச்சைப் படுத்தியுள்ளார்கள்.
தமிழரசுக் கட்சியினர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதை அவர்களுடைய இந்த முடிவு உணர்த்துகிறது.
தற்போது அது நெதர்தலாக இருந்தாலும் சரி பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.
அதாவது இவர்கள் பிரிந்து சென்று தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளனர். இது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அத்துடன் இவர்களின் நடவடிக்கை அற்ப தேர்தல் கதிரைகளுக்காக தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயற்பாடாகும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)