
posted 8th January 2023
யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (06) யாழ். சேர் பொன் இராமநாதன் வீதியில் உள்ள அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சிச் சபைகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் அக்கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வோம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)