உள்ளுர் அதிகார சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 19 கட்சிகள் 54 இடங்கலில் போட்டி

தற்பொழுது நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் அதிகார சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஒரு நகர சபைக்கும், நான்கு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் மொத்தம் 19 கட்சிகள் 54 இடங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

வெள்ளிக்கிழமை (20.01.2023) நண்பகல் 12 மணியுடன் தேர்தலுக்கு போட்டியிடும் கட்சிகள் தங்கள் கட்டுப்பணத்தை செலுத்தும் இறுதி தினமாகவும் நேரமாகவும் இந் நாள் அமைந்திருந்தது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை , மன்னார் பிரதேச சபை , நானாட்டான் பிரதேச சபை , மாந்தை மேற்கு பிரதேச சபை . மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய இடங்களுக்கான உறுப்பினர்களே இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

மன்னார் மாவட்டத்தில் இந்த 05 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்;

  • இலங்கை தமிழரசுக்கட்சி 05 இடங்களிலும்,
  • ஜாதிக ஜன பல பேஹய கட்சி மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய 03 இடங்களிலும்

  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 05 இடங்களிலும்

  • சுயேட்சைக்குழு 01 மன்னார் பிரதேச சபை ஆகிய ஒரு இடத்திலும்,

  • சுயேட்சைக்குழு 02 மன்னார் நகர சபை ஆகிய ஒரு இடத்திலும்,

  • ஐக்கிய மக்கள் கட்சி நானாட்டான் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய 02 இடங்களிலும்,

  • சுயேட்சைக்குழு 03 முசலி பிரதேச சபை ஆகிய ஒரு இடத்திலும்,

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 05 இடங்களிலும்,

  • ஐக்கிய தேசிய சுதந்திர முன்னனி கட்சி முசலி பிரதேச சபை ஆகிய ஒரு இடத்திலும்

  • ஐக்கிய தேசியக் கட்சி 05 இடங்களிலும்,

  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டனி கட்சி முசலி பிரதேச சபை தவிர்ந்த ஏனைய 04 இடங்களிலும்,

  • லங்கா ஜனதா பக்ஷ கட்சி நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய 02 இடங்களிலும்,

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னனி கட்சி முசலி பிரதேச சபை ஆகிய 01 இடத்திலும்,

  • ஈழமக்கள் ஜனநாயக கட்சி மன்னார் நகர சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகிய 02 இடங்களிலும்,

  • ஐக்கிய தேசிய கூட்டமைப்பு மன்னார் நகர சபை , நானாட்டான் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய 03 இடங்களிலும் ,

  • ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மன்னார் பிரதேச சபை முசலி பிரதேச சபை ஆகிய 02 இடங்களிலும் ,

  • ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 05 இடங்களிலும் ,

  • ஜனநாயக ஐக்கிய முன்னனி முசலி பிரதேச சபை ஆகிய 01 இடத்திலும் ,

  • ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி 05 இடங்களிலும்

போட்டியிடுவதற்காக குறிப்பிட்ட கட்சிகள் குழுக்கள் மன்னார் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் தங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

இதன் அடிப்படையில்;

  • மன்னார் நகர சபையில் 11 கட்சிகளும் ,
  • மன்னார் பிரதேச சபையில் 09 கட்சிகளும் ,
  • நானாட்டான் பிரதேச சபையில் 12 கட்சிகளும் ,
  • மாந்தை மேற்கு பிரதேச சபையில் 09 கட்சிகளும் .
  • மற்றும் முசலி பிரதேச சபையில் 13 கட்சிகளும்

இத் தேர்தலில் நேரடியாக போட்டியிட களம் இறங்கியுள்ளன.

இக் கட்சிகளினதும் சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பாளர் மனுக்கள் 21.01.2023 நண்பகல் 12 மணிவரை மன்னார் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்படுவதால் வெள்ளிக்கிழமை (20) மற்றும் சனிக்கிழமை (21) வரை மன்னார் நகரில் மன்னார் மாவட்ட செயலகத்தினூடாகச் செல்லும் பிரதான பாதை மற்றும் தபால் நிலைய வீதி பாதுகாப்புக் கருதி போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளுர் அதிகார சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 19 கட்சிகள் 54 இடங்கலில் போட்டி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)