உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல்

தற்பொழுது நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் அதிகார சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஒரு நகர சபைக்கும், நான்கு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக கட்சிகளும், சுயேட்சைகளும், வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கும் நிலையில் இத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 89794 வாக்காளர்கள் தற்பொழுது வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வாக்காளர்களில்;

  • மன்னார் நகர சபைக்கு 15966 வாக்காளர்களும்
  • மன்னார் பிரதேச சபைக்கு 23971 வாக்காளர்களும்

  • நானாட்டான் பிரதேச சபைக்கு 17455 வாக்காளர்களும்

  • முசலி பிரதேச சபைக்கு 13738 வாக்காளர்களும்

  • மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 18664 வாக்காளர்களும்

வாக்களிக்க இருக்கின்றனர்.

இத் தேர்தல் நடக்கும் நாளில் இவர்கள் தங்கள் பகுதிகளில் வாக்களிப்பதற்கு மன்னார் நகர சபை பகுதியில் தனி வரிசை வாக்கெடுப்பு 11 நிலையங்களிலும், இரண்டு வரிசை வாக்கெடுப்பு 04 நிலையங்களிலும், மொத்தம் 15 நிலையங்களிலும்;

மன்னார் பிரதேச சபை பிரிவில் தனி வரிசை வாக்கெடுப்பு 13 நிலையங்களிலும், இரண்டு வரிசை வாக்கெடுப்பு 11 நிலையங்களிலும், மொத்தம் 24 நிலையங்களிலும்;

நானாட்டான் பிரதேச சபை பிரிவில் தனி வரிசை வாக்கெடுப்பு 20 நிலையங்களிலும், இரண்டு வரிசை வாக்கெடுப்பு 03 நிலையங்களிலும், மொத்தம் 23 நிலையங்களிலும்;

முசலி பிரதேச சபை பிரிவில் தனி வரிசை வாக்கெடுப்பு 11 நிலையங்களிலும், இரண்டு வரிசை வாக்கெடுப்பு 05 நிலையங்களிலும், மொத்தம் 16 நிலையங்களிலும்;

மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவில் தனி வரிசை வாக்கெடுப்பு 31 நிலையங்களிலும், இரண்டு வரிசை வாக்கெடுப்பு 01 நிலையத்திலும் மொத்தம் 32 நிலையங்களிலும் வாக்களிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More
Varisu - வாரிசு - 06.12.2025

Varisu - வாரிசு - 06.12.2025

Read More