
posted 1st January 2023

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று சனிக்கிழமை (31) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடுவித்தல் மற்றும் பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புணரமைப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)