
posted 3rd January 2023
மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் தலைமையிலான மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் College of Management and Technology (CMT Campus) தவிசாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலாக்கா ஆளுநரின் பங்குபற்றுதலுடன் திங்கட் கிழமை (02) கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின்போதே அவரால் இந்நியமனம் வழங்கி வகைப்பட்டுள்ளது.
அதேவேளை, கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்களின் அழைப்பின் பேரில் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள், புதன்கிழமை (04) கல்முனைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)