
posted 8th January 2023
83 கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்றுசனிக்கிழமைகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு அனுமதிப் பத்திரங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், பூநகரி பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள், கடற்தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட பகுதியை பார்வையிட்டதுடன், பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)