5ஆம் ஆண்டு புலமைபரிசு பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் முதலிடம்.

தற்பொழுது வெளிவந்திருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசுப் பரீட்சையில் நாட்டில் நூறு கல்வி வலையங்களில் 3,29,668 பரீட்சாத்திரிகளில் 2,73,515 மாணவர்கள் பகுதி ஒன்றில் 35 புள்ளிகளுக்குக் கூடுதலாகவும், பகுதி இரண்டில் 35 புள்ளிகளுக்குக் கூடுதலாகவும் பெற்றதனால் மாணவர்கள் சராசரியாக 70 க்கு மேலான புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தி அடைந்துள்ளனர்.

அதாவது 82.97 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று இப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பரீட்சை முடிவின் வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களை நோக்கும் போது யாழ்ப்பாணம் கல்வி வலயம் முதலாம் இடத்தையும், துணுக்காய் கல்வி வலயம் பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

அதாவது யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 2747 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியதில் 2281 மாணவர்களில் 83.04 வீதமானோர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 1ம் இடத்தையும் ,

தென்மராட்சி கல்வி வலயத்தில் 901 மாணவர்கள் தோற்றி 736 மாணவர்களில் 81.69 வீதமானோர் சித்தியடைந்து 2ம் இடத்தையும் ,

வடமாராட்சி கல்வி வலயத்தில் 1420 மாணவர்கள் தோற்றி 1151 மாணவர்களில் 81.06 வீதமானோர் சித்தியடைந்து 3ம் இடத்தையும் ,

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 2296 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 1833 மாணவர்களில் 79.83 வீதமானோர் சித்தியடைந்து 4ம் இடத்தையும் ,

மடு கல்வி வலயத்தில் 454 மாணவர்கள் தோற்றி 360 மாணவர்களில் 79.3 வீதமானோர் சித்தியடைந்து 5ம் இடத்தையும் ,

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 1528 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 1205 மாணவர்களில் 78.86 வீதமானோர் சித்தியடைந்து 6ம் இடத்தையும் ,

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் 543 மாணவர்களில் 428 மாணவர்களில் 78.82 வீதமானோர் சித்தியடைந்து 7ம் இடத்தையும் ,

தீவுப்பகுதி கல்வி வலயத்தில் 536 மாணவர்கள் தோற்றி 422 மாணவர்களில் 78.73 வீதமானோர் சித்தியடைந்து 8ம் இடத்தையும் ,

வலிகாமம் கல்வி வலயத்தில் 2618 மாணவர்களில் 2045 மாணவர்கள் 78.11 வீதமானோர் சித்தியடைந்து 9ம் இடத்தையும்,

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 610 மாணவர்களில் 474 மாணவர்கள் 77.7 வீதமானோர் சித்தியடைந்து 10ம் இடத்தையும்,

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 1642 மாணவர்கள் தோற்றி 1213 மாணவர்களில் 73.87 வீதமானோர் சித்தியடைந்து 11ம் இடத்தையும்,

மன்னார் கல்வி வலயத்தில் 1705 மாணவர்கள் தோற்றி 1257 மாணவர்களில் 73.72 வீதமானோர் சித்தியடைந்து 12ம் இடத்தையும்,

துணுக்காய் கல்வி வலயத்தில் 627 மாணவர்களில் 441 மாணவர்கள் 70.33 வீதமானோர் சித்தியடைந்து 13ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

5ஆம் ஆண்டு புலமைபரிசு பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் முதலிடம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)