16 ஆவது வருட பொதுக் கூட்டம்

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற விருக்கின்றது.

சங்கத்தலைவரும், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதருமான “தேசமான்ய” யூ.எல்.எம். பைஸர் தலைமையில், மாளிகைக்காடு பாவா றோயல் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.

இலங்கையின் முக்கிய அஞ்சல் தொழிற்சங்கங்களுள் ஒன்றான அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மேற்படி வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் காமினி விமலசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

சங்கப் பொதுச் செயலாளரும், நிந்தவூர் பிரதம தபாலக உதவி தபாலதிபருமான எம்.ஜே.எம். சல்மான் தலைமையிலான குழுவினர் பொதுக் கூட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

தீர்க்கப்படாத மற்றும் அஞ்சல் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முகம் கொடுக்கும் முக்கிய பல பிரச்சினைகள் தொடர்பிலும், நாட்டு மக்களின் இன்றைய இக்கட்டான, அவநிலமைகள் தொடர்பிலுமான பல முக்கிய கோரிக்கைத் தீர்மானங்கள் இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுமென அறிய வருகின்றது.

16 ஆவது வருட பொதுக் கூட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)