‘பிரவாசி பாரதீய சம்மான் விருது' பெற்ற குமார் நடேசன்

இந்திய அரசாங்கத்தின் அதிஉயர் விருதான 'பிரவாசி பாரதீய சம்மான் விருது' பெற்ற எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் சிலோன் லிமிட்டேட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு குமார் நடேசன் அவர்களுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்புத் தமிழ் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (29.01.2023) பாராட்டு விழா நடாத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், ஓய்வுநிலை பிரதம நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் , ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராஜா உட்பட பலதரப்பட்ட நிலையிலுள்ள முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.

‘பிரவாசி பாரதீய சம்மான் விருது' பெற்ற குமார் நடேசன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)