
posted 11th January 2023
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதுடன் கலாசார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைப்பார் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பான முன்னேற்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (10) செவ்வாய்க் கிழமை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முப்படைகளின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போதே ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)