
posted 21st January 2023
யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம்சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம. பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ். முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்ட

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)