
posted 25th January 2023
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன், துணை முதல்வராக வை. கிருபாகரன் கட்சியினால் இன்று புதன்கிழமை (25) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஊழல்களின் கூடாரமாக யாழ். மாநகரசபை அமைந்துள்ளது. தமது பொக்கட்டுக்களை நிறப்பி, மாநகரசபையை மிக மோசமாக பாதிப்படைய செய்துள்ளது.
யாரோ ஒருவர் செய்கின்ற வேலைத் திட்டங்களை தாம் செய்ததாக காட்டிக்கொள்ளும் ஆட்சியே யாழ்.மாநகரசபை உள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம்.
வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும் நிலைமை இருக்கும். வடக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்ற கட்டத்தில் உள்ளனர். பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று அது மட்டும் தான் வித்தியாசம்.
தெற்கில் மொட்டு மட்டும் யானை செல்வாக்கை முற்றும் முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டு தேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
யானை தேர்தல் காலத்தில் முற்று முழுதாக தூக்கி எறியப்பட்ட நிலையில் அவர்கள் கூட்டு சேர்ந்தால் மக்கள் செல்வாக்கு எடுக்கலாமென்று நினைக்கிறார்கள். யதார்த்தத்திற்கு முரணாண வகையில் சிந்தித்து வெற்றி பெறலாம் என்று நினைத்து ஏதோ நடவடிக்கை எடுப்பதாக நினைக்கின்றார்கள்.
தெற்கில் ராஜபக்ஷக்ளுக்கு மக்கள் மத்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பது ஒரு வேடிக்கையான விடயமாகவே காணப்படுகின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)