
posted 5th February 2023
75ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலும் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றன. அத்துடன், மும்மத தலைவர்களின் ஆசியுரையும் நடைபெற்றது.
மாவட்ட மட்ட சுதந்திர தினநிகழ்வில் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)