
posted 27th January 2023
இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை (27) சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராலய அலுவலகத்தில் இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகிய குடியரசு தின நிகழ்வில் யாழ். இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ். இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டது.
இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)