முதன்மை வேட்பாளர்

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மலேசிய இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி கல்முனை மாநகர சபைக்கான முதன்மை (மேயர்) வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்த கலாநிதி. ஜெமீல்,

தமது தலைமையில் தெரிவு செய்யப்படும் சக வேட்பாளர்களுடன் களத்தில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைபற்றுவதற்கான வியூகத்தை வகுத்து தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

துயர் பகிர்வோம்

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் முரண்பட்டு செயல்படும் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் மற்றும் அவரது குழுவினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கலாநிதி ஜெமீலிடம்“தேனாரம்” செய்தியாளர் வினவியபோது.
“பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவரது குழுவினரும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கலந்துரையாட விரும்புவதாக தெரிவித்து அவர்கள் என்னை வந்து சந்தித்தனர்.

மொட்டு சின்னம் சார்ந்த பொது ஜன பெரமுன சார்பில் இணைந்து போட்டியிட நான் தயாரில்லை என்பதை தெட்டத்தெளிவாக அவர்களிடம் தெரிவித்ததுடன்,
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இணைந்து வந்தால் எனது ஆதரவு கிடைக்குமெனவும் தெரிவித்து விட்டேன்” எனக் கூறினார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்துலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாகமகேயுடன் இணைந்து முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கலாநிதி ஜெமீல் தேனாரத்திற்கு மேலும் தெரிவித்தார்.

முதன்மை வேட்பாளர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)