
posted 28th January 2023
கிளிநொச்சி முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 1954ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகளை நோக்கி பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கையிலே கபிசயனின் முயற்சியும், ஆசிரியர்களின் பிரயாசையும், அனைவரின் தளராத விடாமுயற்சியும் இம்மாணவனைச் சாதனையாளனாக மாற்றியது.
இந்த விடாமுயற்சி இம்முறை குறித்த பாடசாலையில் அம் மாணவன் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தி எய்தி தான் முகம் கொடுத்த சோதனையைச் சாதனையாக்கிய முதல் மாணவன்.
குறித்த பரீட்சையில் கௌரீஸ்வரன் கபிசயன் எனும் மாணவனே 147 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளான். இவ்வெற்றி ஒரு ஆரம்பம். இனி வரும் காலங்களில் கபிசனின் வெற்றியை பின் தொடர்ந்து பலவித சாதனைகளை மாணவர்கள் எய்துவார்கள் என்பது பலரினதும் எதிர்பார்ப்பும் கூட.
இதனால் குறித்த பாடசாலை சமூகம் மிக்க மகிழ்வடைந்துள்ளனர்.
அத்துடன், இம்மாணவனை தேனாரம் இணையத்தளமும் மேலும் மேலும் கல்வியில் வெற்றிபெறவும், அனைத்து மாணவர்களுக்கும் முன் உதாரணமாக விழங்குமாறும் இறை ஆசீர்கூறி வாழ்த்துகின்றது.

கௌரீஸ்வரன் கபிசயன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)