மன்னார் மாவட்ட செயலகத்தில் சம்பிரதாய முறைப்படி கடமைகள் ஏற்பு

துயர் பகிர்வோம்

பழையனதை கலைந்து புதியன புகுதல் என்ற நிலையில் 2023 ஆம் ஆண்டு புதுவருடத்தின் ஆரம்ப நாளில் அரச அதிகாரிகள், ஊழியர்கள் கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்திலும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் திங்கள் கிழமை (02.01.2023) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

இதைத் தொடர்ந்து மங்கள விளக்குகள் பதவிநிலை அதிகாரிகளால் ஏற்றப்பட்டன.

அத்துடன் மும்மத பிராத்தனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விஷேட சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

இதனையடுத்து அரச அதிபர் தனது சிறிய உரையில் கடந்த காலத்தில் பல சிரமங்கள் இருந்தபோதும் மாவட்ட செயலகத்தில் கடமைபுரிந்த யாவரும் சிறந்த முறையில் உங்கள் கடமைகளை செய்தமைக்கு நன்றி நவிழ்கின்றேன் எனவும்,

இவ்வருடம் கடமைகள் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை காணப்படுவதால் நாம் யாவரும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் எமது கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து புது வருடத்துக்கான கைவளங்கல் வெற்றிலையில் வைத்து வழங்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Online Tutoring

மன்னார் மாவட்ட செயலகத்தில் சம்பிரதாய முறைப்படி கடமைகள் ஏற்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)