மக்களைச் சந்திப்பது மக்களின் அரசியல் வாதிகளே!

பேச்சுவார்த்தை ஓரிருவருடன் மூடிய அறைக்குள் பேசுவதை விடுத்து திறந்த முறையில் இப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அதற்கு முன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் தங்கள் மக்களிடம் சென்று கல்விமான்கள் , பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கலாம் அல்லது சிறு சமூகமாக இருக்கலாம் அரசியல் நிபுணர்களாக இருக்கலாம் இவர்களையும் ஒன்றுதிரட்டி ஆலோசனைகள் பெற வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மன்னார் மாவட்ட இணைப்பாளர் யாக்ட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்தும் நோக்குடன் வியாழக்கிழமை (05) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

துயர் பகிர்வோம்

இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மன்னார் மாவட்ட இணைப்பாளர் யாக்ட்சன் பிகிராடோ ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

வியாழக்கிழமை (05) வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியாக வடகிழக்கு மாவட்டங்களில் தமிழ் பகுதிகளில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெறுகின்றது.

இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஜனவரி மாதம் 5ந் திகதி தொடக்கம் 10ந் திகதி வரை நடைபெற இருக்கின்றது.

எங்கள் நோக்கம் வடக்கு கிழக்கு மக்கள் கௌரவமான ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி அதிகாரப் பகிர்வினை தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஓரணியில் திரண்டு வலியுறுத்த வேண்டும் என்பதே.

செய்திகள் மூலம் நாங்கள் அறிகின்றோம்.. ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.

The Best Online Tutoring

எங்கள் வேண்டுகோள் இந்த ஓரிரு தமிழ் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுமே ஒன்றிணைந்து ஒரே குரலாக ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டும் என்பதே எமது மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

இவர்களின் பேச்சுவார்த்தை ஓரிருவருடன் மூடிய அறைக்குள் பேசுவதைவிடுத்து திறந்த முறையில் இப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

ஆகவேதான் இவ்வாறான நோக்கத்துடன் கடந்த நூறு நாட்கள் இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இன்றைய இப் போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதற்கு எமது மக்களின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எமக்கு இருந்து வருகின்றது என தெரிவித்தார்.

மக்களைச் சந்திப்பது மக்களின் அரசியல் வாதிகளே!

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)