
posted 3rd January 2023
தென்மராடசி வரணிகரம்பைக்குறிச்சிஅமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)