
posted 24th January 2023
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்கள் பற்றிய வைத்திய பரிசோதனை செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனிபாவின் முன்மாதிரி செயற்திட்டத்திற்கு அமைவாக, அவரது கோரிக்கையின் பேரில் இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எச்.எம். ஆஷாத் அவர்களின் வழிகாட்டுதலில் வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு மையமான தொற்றா நோய்ப் பிரிவினர் குறித்த வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.
சம்மாந்துறை வைத்தியசலையின் திட்டமிடல் பொறுப்பு வைத்தியத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம். நியாஸ் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில், குறித்த தொற்றா நோய் வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்றன.
குறித்த வைத்திய பரிசோதனை நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம். பாரிஸ், நிருவாக உத்தியோகத்தர் கே.பி. சலீம், சிரேஷ்ட கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.ஐ. தாஸிம் உட்பட வைத்தியசாலை முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)