தார்மீக கடமை

பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் பணியில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனையிட்டு பெற்றோர் விழிப்புடன் இருப்பதுடன் தத்தமது பிள்ளைகளின் நடத்தைக் கோலங்களை தினமும் அவதானிக்க வேண்டும். அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்கள் பற்றிய தகவல்களை சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிசாருக்கு வழங்க வேண்டியது எமது தார்மீக கடமையாகும்.

இவ்வாறு கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம் குறிப்பிட்டார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் (தேசிய பாடசாலை) க.பொ.த.(உ/த) மாணவர் தின விழா இப் பாடசாலை அதிபர் செ. கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

துயர் பகிர்வோம்

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் கலாநிதி. மூ. கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட விஞ்ஞான வள நிலைய முன்னாள் பணிப்பாளர் நா. புள்ளநாயகம் கௌரவ அதிதியாகவும், கல்முனை தமிழ் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச. சரவணமுத்து சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு கலாநிதி மூ. கோபாலரெத்தினம் மேலும் பேசுகையில்;

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் உயர்தர வகுப்பில் நான்கு பாடத்துறைகள் மட்டுமே இருந்தன. இன்று கல்வி அமைச்சு அறுபதுக்கும் மேற்பட்ட பாடத் துறைகளை உயர்தர வகுப்பில் அறிமுகம் செய்துள்ளது. எனவே மாணவர்கள் விரைவாக தொழில் வாய்ப்பையும், அதிக வருமானத்தையும் பெறக்கூடிய துறைகளைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும்.

விலைமதிக்க முடியாத சிலைகளாக மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களின் கழுத்தில் உங்களது அதி உச்சமான பெறுபேறுகள் மாலைகளாக விழவேண்டும். இதுவே யாவரினதும் எதிர்பாப்பாகும்.

இவ் விழாவில் இப் பிராந்தியத்தில் அதிகளவான பொறியியலாளர்களையும், துறைசார் அறிஞர்களையும் உருவாக்கிய நா. புள்ளநாயகத்தை கௌரவ அதிதியாக அழைத்துது கௌரவித்தமையினால் இவ் விழா மேலும் பெருமையடைகின்றது என்றார்.

தார்மீக கடமை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)