
posted 29th January 2023
சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று ஞாயிற்றுக் கிழமை (29) காலை 11:30 மணியளவில் மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால் பேரணியாக சென்றது.
இதில் சிறுவர்களால்;
- மரங்களை வெட்டி வளங்களை அழிக்காதே
- மது போதையை கட்டுப்படுத்து
- சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுத்து நிறுத்துங்கள்
உட்பட பல்வேறு பதாதைகள் ஏந்தியவாறு சென்றனர்.
இதில் மணல்காடு கிராமத்திற்க்குட்பட்ட , சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)