
posted 27th January 2023
குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி நேற்று வெள்ளி (26) விடுதலை செய்யப்பட்டார்.
சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற அரசியல் கைதியே இவ்வாறு, மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஜூன் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் மரக்காலையில் வைத்து இவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்திருந்தனர். தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தநிலையில், இவர் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் குற்றமற்றவர் என்று கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைக்கு பின்னர் தனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லைராஜ்,
“12 வருடங்கள் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கிறேன். என்னைப் போன்று - 25 வருடங்களுக்கும் மேலாகவும் அரசியல் கைதிகளாக சிறைகளில் என்னுடன் ஒன்றாக இருந்த பலர் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விரைவில் விடுதலை செய்து தர வேண்டும்” என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)