
posted 4th January 2023
முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிற் இறைபதமேந்தியதையொட்டி இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று புதன்கிழமை (04.01.2023) முற்பகல் கொழும்பிலுள்ள அப்போஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டுள்ள விஷேட நூலில் தனது அனுதாபச் செய்தியினை பதிவு செய்ததுடன், இலங்கைக்கான வத்திக்கான் அப்போலிக்க தூதுவர் மேதகு பிரைன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்து அவருடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)