
posted 20th January 2023
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்ற குடும்பஸ்தர் இன்னும் வீடு திரும்பாமலும் அவரைப் பற்றிய தகவல் ஒன்றும் இன்னும் எட்டாத நிலையில் அவரின் குடும்பஸ்தர் இவரைத் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிசிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிவகுமார் குமார் என்பவர் 1995ஆம் ஆண்டு யாழ் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அம்மார் அச்சங்குளம் பகுதிக்கு வந்து அங்கேயே திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு மனைவியுடன் மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். சம்பவம் அன்று அதாவது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 19ந் திகதி அன்று வழமைபோன்று தான் வேலைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை இன்னும் தனது வீடு வந்து சேரவில்லையென்றும் இவரைப்பற்றிய தகவல் ஒன்றும் இல்லையென்றும் இவரின் மனைவி முருங்கன் பொலிசில் முறையீடு செய்துள்ளார்.
அத்துடன் காணாமல் போனவரின் குடும்பத்தினர் இவரைத் தொடர்ந்து தேடிவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது..

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)